date unknown
Appa Thol...
அப்பா தோள்…
தன்னை விட தொலைப்பார்வை
தன் பிள்ளைக்கு வேண்டுமென
தோளிலேற்றி கொண்டாடும் தந்தை;
கருவறைலிருக்கும் கடவுளை
தோளேற்றி ஊர்வலம் வரும்
துதிக்கய்யனின் துரவரம் போல்...
அரசன் மகனாய் பிறந்து
அப்பா அரவணைப்பை அதிக காலம் பெற அதிர்ஷ்டமில்லாமல்
ஊர் பெயர்ந்து, உழைத்து, உதவி செய்து,
உயர்ந்த மனிதன் நீ…
வரனாய், வரமாய் என் அன்னையை கை பிடித்து
வாழ்க்கை இன்ப துன்பங்கள் ஒன்றாய் பகிர்ந்துண்டு
வித்திட்டு, ஐந்து பிள்ளைகளை அன்னைக்கு வரமளித்து
சொத்து என்பது நல்லெண்ணம், நல்லிணக்கம்,
நன்மை பயிலுதல் என வாழ்க்கை பாடம் சொல்லித்தந்து
அரை ஆயுளாம் அறுபது வந்ததும்
அவசரமாய் ஆகாயம் சென்றாய்…
எப்படியெல்லாம் நீ உடன் பயணிக்கிறாய் …
உன் நடை, உடை, பேச்சு, மொழித்திறன்,
உன் உதவும் ஆற்றல், உலக அறிவுப்பசி…
நாடு வாழியின் மகனாயினும்
உன்னுள் இருந்த நாடோடியின் துணிச்சல், தேடல்…
அனைத்தும், உன் கையெழுத்து போலவே
வரமளித்தாய்…
தோள் வலிக்கும்போது சொல் அப்பா
என் இடை ஒரு பாரமாக தோன்றும் பொழுது…
இறங்க மனமில்லாமல்
அப்பா தோளை இருக்க பற்றிக்க்கொள்ளும்
உன் மகன்….
Happy Fathers Day
Dedicated to my Father
Sri Makairyam Thirunaal Son
Sri. Rajachandran.
Kochukottaram, Changanassery
Kerala.