date unknown
கலியுகம் காணும் மற்றும் ஒரு சுபகிருது சித்திரை திருநாள்
பல யுகம் கண்ட திராவிட தமிழனின் புத்தாண்டு நன்னாள்...
உதித்து சூரியன் உயர்ந்து வர
புதுக்கச்சை கட்டி
கரைத்த சாணியால் தரை மெழுகி
அரைத்த அரிசியால் கோலமிட்டு
மாஇலை தோரணம் கெட்டி
மல்லிகையால் முடி சூடி
பணியின் பயனை அறுவடை செய்ய
பாசத்தோடு இயற்க்கைக்கு தலை வணங்கும் வ்ருத்தி நாள்...
இனிப்பும் துவர்ப்பும் கசப்பும் கலர்ந்த வாழ்கையை வரமாக உண்டு மகிழும் திரு நாள்...
தேன் காயும், மாங்கனியும்,
வெள்ளரியும், வெற்றிலையும்
கொழுக்கட்டையும் உழுந்து வடையும்
பருப்பும் பாயசமும் பொங்கலோடு சேர்த்துண்டு
மங்களம் உண்டாக,
மானத்தோடு சேர்ந்து வாழ
மனிதரில் முதல்வனான தமிழனுக்கு
மொழிகளில் முதலான தமிழால்
வளர்ச்சி வாழ்த்துக்கள்...
14 April 2022