Whispers of a Wanderer

14 January 2021

பற்றற்ற வெண் பொங்கல்

பற்றற்ற வெண் பொங்கல்
அக்கறை கொண்ட சர்க்கரை பொங்கல்
மஞ்சள் கெட்டி, பொட்டிட்ட
பச்சைமண் பானையில்...

பசு தந்த சாணியில்
பிடித்தெடுத்த பிள்ளையார்...

சுவைக்க, முதலில் உழைக்க வேண்டும் என்கிற பொருளோதும்,
வளைந்து நின்று விளை எடுத்த
உழவன் உவமைபோல்,
நின்று வளைந்த கரும்பு வில்...

இஞ்சியோடும், வள்ளி கிழங்கோடும்
தேன் காயோடும், மஞ்சள் பழத்தோடும்
ஐந்து முக விளக்கோடும், ஆறு முகன் அருளோடும்...

கொதித்தாறிய பொங்கலோடு
உதித்தது வரும் சூரியனை
கற்பை காக்கும் கற்பூரமேற்றி
உடலால் பணிந்து, உள்ளத்தால் உணர்ந்து,
வணங்கி வழிபெடும் தை பிறந்த திருநாள்...

பொங்கட்டும் ஆனந்தம், நிலைக்கட்டும் செல்வம்,
நிமிரட்டும் தன்மானம்,
நகரட்டும் இல்லைய்மையின் இருள்
கிட்டட்டும் அமைதி, எட்டெட்டும் உயர்
செழிக்கட்டும் வய்யகம், வாழட்டும் உயிரினங்கள்...
வளமோடு, நலமோடு...

Happy Thai-Pongal.