Whispers of a Wanderer

2 December 2021

பிரதோஷம்

பிரதோஷம்

மாதம் இருமுறை
நாள் பன்னிரெண்டும் பதின்மூன்றும் சேரும் வேளை
உதயன் மேற்கு மறையும் முன்னும் பின்னும்
ஒன்றரை என மூன்று மணிநேரம்

அசுரரை அடக்கி தங்களை காக்க
கைலாயத்தை நந்தியுடன் வலம்வர
சிவ சிவ என்றழுதழைத்ததும்
நம நம என்று தாழ்ந்து பணிந்ததும்
ஹர ஹரனவன் எழுந்தருளி
மய மயமென துன்பம் மாய்த்து
தந்தருளிய விளையாற்றொன்று ।

விஷம் உண்டு கழுத்தில் நின்று
வீழ்ந்த கோலத்தில் விச்ரமம் கொண்டு

வெய்யகம் அசயானிலை கொண்டு
பிரம்மனும் விஷ்ணுவும் கவலையுடன்
சென்று
நந்தி நகராமல் காவல் நின்று
பின் அன்னையுடன் ஈசனமர
தோலேற்றி நகர்வலம் வந்த புண்ணியகாலம்
பிரதோஷ காலம்
நன்மை நிலைக்க
திண்மையை அழிக்க
தன்னையே தியாகம் செய்த தவக்காலம்
ஏற்றிடுவோம் மூன்று மணிநேரம்
நாமும் இத்தவக்கோலம்…