Whispers of a Wanderer

15 August 2021

2014

தாயின் மணிக்கொடி போல்
தாயகத்தின் மூவர்ண கொடி...

எல்லலையை காப்பாற்ற தியாகத்தில்
விழித்திருக்கும் கண்கள் காணும் மூன்றே நிறம்…

தனது பற்றற்ற சேவைக்கு
ஒப்பற்ற பரிசாய்
மாண்டாலும் மீண்டாலும் ஒரு நாள் பெறுவேன் சுதந்திரம் என,
உன்னத குறிக்கோளோடு வாழ்ந்த, எழுந்த
நம் முன்னோர்களின் தியாகத்தின் அடையாள சக்கிரம்,
அசோக சக்ரம்...

ஏழை என்றாலும் எழுந்து நின்று தன் மகனை, மகளை
தேச சேவைக்கு அனுப்பிவைக்கும்
தன்னலமற்ற பெற்றோர்களின் நம்பிக்கையின் நிறம்...

எளிதல்ல வாழ்க்கை என்றறிந்தும்,
தொல்லை தரும் எதிரியை
எல்லையில் எதிர்கொள்ளும் உணர்வு, தைரியம்…

உழைத்து சிவந்த கைகளின் ‘குங்குமப்பூ’ நிறம் ...

பிறக்கும் போதே தானறியாமலேயே ஊழலுக்கு வித்திடும் கல்வி;

நாமறையாமலேயே நம்மை கடனாளியாக்கும் அரசியலின் தாக்கம் அறியாத அப்பாவி மக்களின் மனதின் ‘வெள்ளை’ நிறம்

பசியில்லா நாடே வல்லரசாகும் என உணர்ந்து
இயற்க்கையை வணங்கி பசுமையின் வித்திடும் விவசாயியின் ‘பச்சை’ உள்ளத்தின் நிறம்...

அரசனையும், ஆண்டியையும்
கற்றவனையும், கல்லூரி காணாதவனேயும்
ஒன்று போல் என்றும் காணும்;

சுழலும் வாழ்க்கையியில் நிலையாய் நிற்கும்
அறம், நெறி தன் அடையாளமாக
நடுநிலை கொண்டு சுழலும் தர்ம சக்ரம்...

எம்மதவும் சம்மதம்,
எம்மொழியும் செம்மொழி,
நம் மொழி என
இணைந்து, விரிந்து பறக்கும் நேச கொடி,
தொப்புள்கொடிக்கும், தாலி கொடிக்கும், இணையாக நாம் மதிக்கும் தேச கொடி…

என்னிலும் மேல் என் தேசம்
எங்கிருப்பினும் எம் மக்கள்
என எங்கிருந்தும் பார்க்க தக
முழுக்கம்பத்தில் பறக்கும் என் உணர்வு கொடி,
உயர் கொடி, உயிர் கொடி…

நான் சுவாசிக்கும் சுதந்திர காற்றின் அடையாள கொடி...

இப்புவியில் இஜ்ஜன்மத்தில் நான் வாழ்ந்த மண்ணின் அடையாள கொடி...

வாழ்க பாரதம்
வாழ்க வய்யகம்…

Happy Independence Day !