15 October 2016
நாளை முதல் நான் தேய்கிறேன் என்பதா
நாளை முதல் நான் தேய்கிறேன் என்பதா
இன்று வரை நான் வளர்ந்தேன் என்பதா
இன்று என் முழுமை அழகை பௌர்ணமி என பூஜிக்கிறாய்
இன்னும் பதினைந்து நாட்களில் மறைந்திருக்கும் என்னை அமவாசி என மதிக்கிறாய்
நான் இருந்தாலும் மறைந்தாலும் நீ காட்டும் பக்குவம்...
நீ இருந்தாலும் இறந்தாலும்
வாழ்கிறாய் என காட்டும் தத்துவம்...
வளரும் பிறையும் தேயும் பிறையும்
வாழ்க்கையின் திரையோட்டம்
கவலை பயம் இனி விண்ணோடு கரையட்டும்,
மண்ணோடு மறையட்டும்...
பௌர்ணமி சந்திரன்